உள்ளூர் செய்திகள்
வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்பட கண்காட்சி வாகனத்தை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, பிரபாக

வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி வாகனம்

Published On 2022-03-15 09:23 GMT   |   Update On 2022-03-15 09:23 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்பட கண்காட்சி வாகனத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வ.உ.சிதம்பரனாரின் 150&வது பிறந்த நாளினை சிறப்பிக்கும் வகையில் அவரது வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்பட கண்காட்சி வாகனத்தினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, பெரம்பலூர்  சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டனர். 

இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சித்தலைவர் ராஜேந்திரன், பெரம்பலூர் நகராட்சித்தலைவர்    அம்பிகா ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கையினை அறிந்துகொள்ளும் வகையில் இந்த நகரும் புகைப்பட கண்காட்சி அரசு மேல்நிலைப்பள்ளி பெரம்பலூரில் துவங்கப்பட்டு தொடர்ந்து தந்தை ரோவர் மேல்நிலைப் பள்ளி பெரம்பலூர், அரசு மேல்நிலைப்பள்ளி எளம்பலூர், அரசு மேல்நிலைப்பள்ளி குரும்பலூர் ஆகிய பள்ளிகளில் நேற்று காட்சிப்டுத்தப்பட்டது. 

இன்று ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளி மேலமாத்தூர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி குன்னம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி குன்னம், அரசு மேல்நிலைப்பள்ளி வேப்பூர் ஆகிய பள்ளிகளில் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வ.உ.சிதம்பரனாரின் சுதந்திர போராட்டம் குறித்து எளிய முறையில் விளக்கப்படும்.

முன்னதாக வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்பட கண்காட்சி வாகனத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவ சிலைக்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, பிரபாகரன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன்,  பெரம்பலூர் நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன் உட்பட அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News