உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

200 பவுன் அடகு நகையுடன் கடைக்காரர் திடீர் ஓட்டம்

Published On 2022-03-15 13:40 IST   |   Update On 2022-03-15 13:40:00 IST
200 பவுன் அடகு நகையுடன் கடைக்காரர் திடீர் ஓட்டம் பிடித்ததால், பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட் டம், ஆலத்தூர் தாலுகா, கொளக்காநத்தம் கிரா மத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் எஸ்.பி. மணியிடம் மனு அளித்தனர். அதில் தெரிவித்துள்ளதாவது:

கொளக்காநத்தம் கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தீபக் என்ற பெயரில் நகை அடகு கடை வைத்து தொழில் செய்து வந்தார். கொளக்காநத்தம், அயினாபுரம், கொளத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த 100&க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது பண தேவைக்காக அந்த அடமான கடையில் நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் தற்பொது விளைபொருட்கள் அறுவடை செய்த நாங்கள் பணத்தை திருப்பி கொடுத்து நகைகளை மீட்க சென்றோம். ஆனால் நகை கடை மூடியே உள்ளது. இது குறித்து அந்த கடையில் வேலை செய்த பெண்ணிடம் கேட்டபோது கடை திறப்பார்கள் என பதில் கூறுகிறார்.

ஆனால் கடந்த சில தினங்களாகவே கடை திறக்கவே இல்லை. அதுமட்டு மின்றி கடை உரிமையாளர் தான் தங்கியிருந்த வீட்டையும் காலி செய்துவிட்டு கடையை மூடிவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் எங்களது 200 பவுனுக்கு மேலான நகை பறிபோயுள்ளது.

எனவே நாங்கள் வைத்த அடமான நகையை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள் ளனர். மனுவினை பெற்றுக் கொண்ட எஸ்.பி. மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

Similar News