உள்ளூர் செய்திகள்
ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கருணை கொலை செய்திட கோரி கலெக்டரிடம் மனு
ஒரே குடும்கருணை கொலை செய்திட கோரி கலெக்டரிடபத்தை சேர்ந்தவர்கள் ம் மனு அளித்துள்ளார்.
பெரம்பலூர்:
பொய் வழக்கு போட்டு மன உலைச்சால் பாதிக்கப்பட்டுள்ளதால் குடும்பத்தை சேர்ந்த 4 பேரையும் கருணை கொலை செய்திட கோரி கலெக்டரிடம் மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரம்பலூர் துறை மங்கலம் அவ்வையார் தெருவை சேர்ந்த முத்துசாமி மகன் கணேசன். இவர் தனது மனைவி, மகன், மகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் கோரிக்கை மனு அளித்தார்.
அதில் நான் மேற்கண்ட முகவரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். என் தாயின் நன்னடத்தையை தட்டிகேட்டதால் என் தாய் கனகாம்பாள், எனது சகோதரிகளான சங்கீதா, நிவேதா ஆகியோர் ஒன்று சேர்ந்து என் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர்.
கடந்த 7 ஆண்டுகளாக ஆர்.டி.ஓ. மற்றும் எஸ்.பி அலுவலகத்திலும் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து தீர்வு காணாமல் என்னை அலைக்கழிக்க விட்டு வருகின்றனர். எனது தாய், சகோதரி மற்றும் உறவினர்கள் ஆகியோரின் கூட்டு சதியால் நானும், எனது குடும்பத்தினரும் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்.
எனவே என் மீது உள்ள பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்னின்று தீர்வு கண்டு என்னையும், என குடும்பத்தையும் கூட்டு சதியிலிருந்தும், கூலிப்படை சதியிலிருந்தும் விடுவித்து பாதுகாக்கவேண்டும். இல்லையென்றால் என்னிடம் உள்ள அரசு ஆவணங்கள் அனைத்தையும் ஒப்படைத்துவிடுகிறேன்,
என்னையும், எனது மனைவி, குழந்தைகளையும் கருணை கொலை செய்துவிட வேண்டுகிறேன் என அம்மனுவில் தெரிவித்துள்ளார்.
மனுவினை பெற்றுக் கொண்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.