உள்ளூர் செய்திகள்
தண்டனை பெற்ற முருகேசன்

சிறுமி பாலியல் வழக்கில் உறவினருக்கு சாகும் வரை சிறை

Published On 2022-03-15 11:55 IST   |   Update On 2022-03-15 11:55:00 IST
சிறுமி பாலியல் வழக்கில் உறவினருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
புதுக்கோட்டை:

தஞ்சை மாவட்டம் பூவனம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா, கணக்கன் காட்டில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது தாய் வீட்டிற்கு, 10-ம் வகுப்பு படித்து வந்த மகளை அனுப்பியுள்ளார்.

அப்போது அந்த வீட்டில் இருந்த சிறுமியின் உறவினரும், தொழிலாளியுமான முருகேசன் என்பவர் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அந்த சிறுமி தனது தாயிடம் தெரிவித்தார். அவர் ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி முருகேசனை கைது செய்தனர்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், நீதிபதி சத்யா இந்த வழக்கில் தீர்ப்பளித்தார். சிறுமியை தொடர் பாலியல் வன் கொடுமை செய்தமைக்காக முருகேசனுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் , அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் இழப்பீட்டு தொகையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். தீர்ப்பு அளிக்கப்பட்டபின் முருகேசன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Similar News