உள்ளூர் செய்திகள்
சதுரங்க போட்டி

சதுரங்க போட்டி

Published On 2022-03-14 16:24 IST   |   Update On 2022-03-14 16:24:00 IST
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பள்ளியில் சதுரங்க போட்டி நடந்தது.
காரைக்குடி

சிகரம் பெண்கள் சதுரங்க கழகம் சிவகங்கை மாவட்ட சதுரங்க கழகத்தோடு இணைந்து மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியை காரைக்குடி கலைவாணி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நடத்தியது. 

காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி போட்டியை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு   மாவட்ட சதுரங்கக் கழக துணைத்தலைவர் சேவு.முத்துக்குமார் தலைமை தாங்கினார்.  செயலாளர்  கண்ணன், பொருளாளர் பிரகாஷ், கூடுதல் செயலாளர் ஜெ.பிரகாஷ் மணிமாறன் மற்றும் சிகரம் பெண்கள் சதுரங்கக் சங்கத்தின் செயலாளர் செல்வி முன்னிலை வகித்தனர். 

காரைக்குடி தெற்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் பிரமிட் ஐ.ஏ.எஸ். அகடமி நிர்வாக இயக்குனர் கற்பகம் சுப்பிரமணியன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். 

மாவட்ட சதுரங்க  கழக துணைத்தலைவர் சார்லஸ் ஜான்கென்னடி, இணைச்செயலாளர்  ராமு, காயத்ரி மொபைல்ஸ் சுரேஷ் மற்றும்  சீனிவாசன், சிகரம் பெண்கள் சதுரங்க கழகத்தின் பொருளாளர் நாச்சம்மை, தலைவர் காயத்ரி, துணை பொருளாளர் தேனம்மை, ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

அதிக போட்டியாளர்களை பங்கேற்க செய்த பள்ளிக்கான விருதை கலைவாணி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சத்யபார்தி பள்ளியும் பெற்றன. அதிக புள்ளிகளை  பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை காரைக்குடி மகரிஷி வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தட்டிச்சென்றது.



Similar News