உள்ளூர் செய்திகள்
பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் சுவாமி திருவீதியுலா
பெரம்பலூர் மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி திருக் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சுவாமி திருவீதி உலா நடந்தது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி திருக் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழா நடப்பது வழக்கம். இதன்படி இந்தாண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த 9ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இதன்படி கோயிலில் முக்கிய நிகழ்வான உதய கருட சேவை நேற்று அதி காலை 5:30 மணி அளவில் மங்கள வாத்தியம் முழங்க திருவீதி உலா நடைபெற்றது.
பங்குனி உத்தரதேரோட்டம் வரும் 17ம்தேதி நடைபெறவுள்ளதால் நேற்று தேர்முகூர்த்த கால் பூஜை செய்யப்பட்டு கால்கோள் விழா நடந்தது. இரவு பெருமாள் வெள்ளி கருட சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித் தார்.
விழாவில் முன்னாள் அறங்காவலர்கள் வைத்தீஸ்வரன், பூக்கடை சரவணன், ஆடிப்பெருக்கு ஆஞ்சநேயர் ஊர்வல கமிட்டி தலைவர் கீற்றுக்கடை குமார், காய்கறி கடை சரவணன் உட்பட பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் அனிதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.