உள்ளூர் செய்திகள்
புதிய பஸ்சை அமைச்சர் தமிழரசி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முடிகண்டம் கிராமத்துக்கு புதிய பஸ் வசதி

Published On 2022-03-12 17:08 IST   |   Update On 2022-03-12 17:08:00 IST
திருப்புவனம் அருகே உள்ள முடிகண்டம் கிராமத்துக்கு புதிய பஸ்வசதியை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வழியாக மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து முடிகண்டம் கிராமத்துக்கு புதிய வழித்தடத்தில் அரசு பஸ் போக்குவரத்து வசதியை மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். 

பஸ்போக்குவரத்து இல்லாத கிராமபகுதிகள்  முழுவதற்கும் புதிய வழிதடத்தில் பஸ் போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறேன். இதன் மூலம் ஏராளமான கிராம மக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் பயனடைய வாய்ப்பு உள்ளது என எம்.எல்.ஏ. தெரிவித்தார்.  மாவட்ட தி.மு.க. துணை செயலாளர்-திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.



Similar News