உள்ளூர் செய்திகள்
தேவகோட்டை அருகே காளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
தேவகோட்டை,
தேவகோட்டை அருகே கோட்டூர் நயினார்வயல் கிராமத்தில் உள்ள மகா காளியம்மன், குதிரை மகா கருப்பர், பறவை சித்தர் பெத்தாயி அம்மாள் கோவில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு முப்பெரும் விழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு வருஷாபிஷேகமும் அதனைத் தொடர்ந்து 108 சங்காபிஷேகமும் நடைபெற்றது.
மாலை 7.00 மணி அளவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். குடும்பம் விருத்தி அடையவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், விரைவில் திருமணம் நடைபெற வேண்டி இளம் பெண்களும், மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர். விழாவில் தேவகோட்டை சுற்றியுள்ள நயினார்வயல், கோட்டூர், பெரியாரை, அடசிவயல், கள்ளிக்குடி, சேண்டல்பிரி யன், வேலாயுதபட்டினம், வீரரை, நாச்சாங்குளம் மற்றும் 50&க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர் இறுதியாக சுமார் 600 க்கும் மேற் பட்டவர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
சிறப்பு அபிஷேகமும் அதனைத்தொடர்ந்து பொங்கல் வைத்தல் மற்றும் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.