உள்ளூர் செய்திகள்
மர்மமான முறையில் இறந்த மூதாட்டி.

மூதாட்டி சாவில் மர்மம்

Published On 2022-03-11 17:25 IST   |   Update On 2022-03-11 17:25:00 IST
முதாட்டி சாவில் மர்மம் இருப்பதாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் புதுத்தெரு 2-வது வீதியில் வீட்டில் தனிமையில் வசித்து வந்தவர் ராமராக்கு என்ற செல்வி (வயது 65). சாலை ஆய்வாளராக பணிபுரிந்து வந்த இவரது கணவர் தமிழரசன் கடந்த ஆண்டு கொரோனா தொற்றா£ல் இறந்தார். 

இந்த நிலையில் ராமராக்கு மகன் ராஜாராமுடன் வசித்து வந்தார். ராஜாராமுக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.  அது தொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளது. 

இந்த வழக்கு தொடர்பாக ராஜாராம் தஞ்சாவூர் நீதிமன்றத்திற்கு காலை 7 மணிக்கு சென்றார். இவரது தாய் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். 

ராஜாராம் தாயை போனில் காலை 11 மணிக்கு தொடர்பு கொண்டு பேசும்போது சமைத்துக் கொண்டி ருப்பதாக கூறியவர், மீண்டும் மதியம் ஒரு மணிக்கு மகன் ராஜாராம் தன் தாய்க்கு போன் செய்தார். அப்போது போன் அனைத்து வைக்கப் பட்டிருந்தது. 

இதனையடுத்து அருகில் இருந்தவர்களை அழைத்து வீட்டில் சென்று பார்க்கச் சொன்னபோது பழைய பொருட்கள் வைத்திருக்கும் அறையில் மூதாட்டி ராமராக்கு மயங்கி கிடப்பதாக தகவல் தெரிவித்தனர். 

பின்பு ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வந்து பரிசோதனை செய்ததில் ராமராக்கு இறந்து விட்டதாக கூறினர். 

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் மூதாட்டியின் மகன், மகளுக்கு தகவல் தெரிவித்தனர். மதுரையில் இருந்து இளைய மகள் பூவேணி சம்பவ இடத்திற்கு வந்தார்.  வாயில் ரத்த கசிவுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த தாயை பார்த்து கதறி அழுதார். 

இதுகுறித்து திருப்பத்தூர்  டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் ஆய்வாளர் சுந்தர மகாலிங்கம் விசாரணை நடத்தி வருகிறார்.
 
அப்போது  தனது தாயை யாரோ கொலை செய்துவிட்டனர் என கூறி அழுதபடி, இவரது மகள் தனது தாய் கழுத்தில் அணிந்திருந்த செயின், கையில் இருந்த வளையல் மற்றும் செல்போன் காணவில்லை என்றும், தெரிவித்ததை அடுத்து திருப்பத்தூர் போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து கொலையா அல்லது வேறேதும் காரணமா?  என விசாரணை நடத்தி வருகின்றனர். 

Similar News