உள்ளூர் செய்திகள்
இடிந்து விழும் நிலையில் நீர்த்தேக்க தொட்டி
அங்கன்வாடி மையம் அருகே இடிந்து விழும் நிலையில் நீர்த்தேக்க தொட்டியை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா துவார் ஊராட்சியை சேர்ந்த பூலாம்பட்டி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இந்த தொட்டி முற்றிலும் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது.
இதன் அருகாமையில் அங்கன்வாடி கட்டிடமும், குடியிருப்பு பகுதிகளும் அமைந்துள்ளது. மேலும் இந்த தொட்டியின் அருகே உயர் அழுத்த மின் கம்பி களும் உள்ளன.
இது குறித்து அந்தப்பகுதி மக்கள் கூறியதாவது:&
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் பயனுக்காக புதிய நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் பழைய நீர்த் தேக்கத் தொட்டியை அகற்றுவதற் கான எந்த ஒரு நடவ டிக்கையும் எடுக்கப்பட வில்லை.
தற்போது அந்த குடிநீர் தொட்டி இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால் அங்கன்வாடி குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும், வட்டார வளர்ச்சி அலுவலரி டமும் கோரிக்கை விடுத்தும் இன்றளவும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் உயிர்பலி ஏற்படு வதற்குள் அதி காரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.