உள்ளூர் செய்திகள்
பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் தொடங்கிய போது எடுத்த படம்.

பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்

Published On 2022-03-10 15:38 IST   |   Update On 2022-03-10 15:38:00 IST
பெரம்பலூர் மதன கோபால சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்தர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் அருள்மிகு மரகதவல்லி  தாயார்சமேத மதனகோபால  சுவாமி திருக் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா நடப்பது வழக்கம்.

இதன்படி இந்தாண்டு பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நேற்று 9ம்தேதி கொடியேற்ற நிகழ்ச்சி மங்கள வாத்தியம் முழங்க நடந்தது. பூஜைகளை பட்டாபி பட்டாச்சார்யா செய்து வைத்தார்.  ஹம்ச வாகனத்தில் சுவாமிவலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விழாவில் முன்னாள் அறங்காவலர்கள்  வைத்தீஸ் வரன்,  பூக்கடைசரவணன், ஆடிப்பெருக்கு  ஆஞ்சநேயர் ஊர்வல கமிட்டி தலைவர் கீற்றுக்கடை குமார், காய்கறி கடை சரவணன் உட்பட பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் அனிதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.இதை தொடர்ந்து தினமும் சிம்மம், அனுமந்தம், சேஷ, வெள்ளி கருடன், யானை, புஷ்பபல்லக்கு போன்ற வாகனங்களில் சுவாமி அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

வரும் 17ம்தேதி காலை 10 மணியளவில் பங்குனி உத்திர தேரோட்டம் நடை பெறுகிறது.

Similar News