உள்ளூர் செய்திகள்
கூடுதல் கட்டிடத்திற்கு அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார்.

அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம்

Published On 2022-03-08 15:22 IST   |   Update On 2022-03-08 15:22:00 IST
சிவகங்கை மாவட்டம் கண்டராமாணிக்கம் அருகே அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார்.
நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள  கண்டராமாணிக்கத்தில் சுப்பிரமணியம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட உள்ளது. 

இதற்காக நமக்கு நாமே திட்டத்தில் ரூ.37.50 லட்சம் மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமையில்  கலெக்டர் மதுசூதன் ரெட்டி முன் னிலையில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது.

இந்த நிகழ்வில் திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, சேது பாஸ்கரா கல்வி குழுமங்களின் நிறுவனர் சேதுகுமணன், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள்,  அதிகாரிகள், தி.மு.க. ஒன்றிய, நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News