உள்ளூர் செய்திகள்
பேச்சிபாறை ஸ்ரீ பேச்சி அம்மன் தேவி கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை
பேச்சிபாறை ஸ்ரீ பேச்சி அம்மன் தேவி கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.
கன்னியாகுமரி:
பேச்சிபாறை அணை அருகில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஸ்ரீ பேச்சியம்மன் தேவி கோவிலின் வருடாந்திர திருவிழா 8 நாள் நடைபெற்று வருகிறது. முதல் நாள் திருவிழாவில் தேவஸ்வம் தந்திரி ஸ்ரீமான் தலைமையில் கொடியேற்றப்பட்டது.
அதை தொடர்ந்து விழா தொடங்கியது. தினமும் காலையில் கணபதிஹோமம் நடைப்பெற்று வந்தது. கோவிலின் முக்கிய நிகழ்ச்சியாக 1008 திருவிளக்கு பூஜை நடைப்பெற்றது.
இன்று மாலை தேவிக்கு ஆறாட்டுக்கு எழுந்தருளுதல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து கோவிலின் கொடி மரத்தில் இருந்து கொடி இறக்கப்படுகிறது.