உள்ளூர் செய்திகள்
மானாமதுரை-விருதுநகர் இடையே மின்சார பாதையில் அதிவேகரெயில் சோதனைஓட்டம் நடந்தது.
மானாமதுரை
மானாமதுரையில் இருந்து நரிக்குடி, அருப்புக்கோட்டை வழியாக விருதுநகர் வரை ரெயில்பாதை மின்மயமாக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து மத்திய ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார்ராய் தலைமையிலான பொறியாளர்கள் குழு இந்த வழித்தடத்தில் சோதனை ரெயிலை இயக்கி ஆய்வு செய்தது.
விருதுநகரில் இருந்து புறப்பட்ட டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட சோதனை ரெயில் பிற்பகல் மானாமதுரை வந்தடைந்தது. விருதுநகர், அருப்புக்கோட்டை, நரிக்குடி உள்ளிட்ட ரெயில்நிலையங்களில் லெவல் கிராசிங்குகள், சிக்னல்கள் ஆகியவற்றையும், மின் வழித்தடத்தையும் குழுவினர் ஆய்வு செய்தனர்.
அதன் பின்னர் மானாமதுரைக்கு ஆய்வுக்குழுவினர் வந்துசேர்ந்தனர். அதைத்தொடர்ந்து சோதனை ரெயிலில் மின்சார என்ஜின் பொருத்தப்பட்டு அதிவேக சோதனை ரெயில் கிளம்பியது. இந்த ரெயிலில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர்குமார்ராய் உள்ளிட்ட பொறியாளர் குழுவினர் இருந்தனர்.
முன்னதாக அதிவேக ரெயிலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் ஊழியர்கள், மின்வழித்தடம் அமைத்த நிறுவன ஊழியர்கள் பங்கேற்றனர்.