உள்ளூர் செய்திகள்
FILPHOTO

மதனகோபாலசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

Published On 2022-03-05 14:59 IST   |   Update On 2022-03-05 14:59:00 IST
மதனகோபாலசுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி முகூர்த்தக்கால் நடப்பட்டது.
பெரம்பலூர்:

பெரம்பலூரில் உள்ள பஞ்சப்பாண்டவருக்கு தனி சன்னதி கொண்ட புகழ்பெற்ற மரகதவல்லி தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வருகிற 8-ந்தேதி இரவு அங்குரார்ப்பணம் மற்றும் 9-ந்தேதி காலை கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. 

பெருந்திருவிழாவை முன்னிட்டு முகூர்த்த பந்தல் கால் ஊன்றும் நிகழ்ச்சி நேற்று மங்கள வாத்தியத்துடன் நடைபெற்றது. முகூர்த்தக்கால் நடுவதற்கான பூர்வாங்க பூஜைகளை கோவில் நிர்வாக அலுவலர் அனிதா முன்னிலையில் அர்ச்சகர் பட்டாபிராமன் பட்டாச்சாரியார் செய்து வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அறங்காவலர்கள்வைத்தீஸ்வரன், பூக்கடை சரவணன், ஆடிப்பெருக்கு ஆஞ்சநேயர் ஊர்வல கமிட்டி தலைவர் கீற்றுக்கடை குமார் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Similar News