உள்ளூர் செய்திகள்
பெரம்பலூரில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள குரும்பபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி சுமதி(வயது 35).
இந்த தம்பதிக்கு ரூபக் (16) என்ற மகனும், யுவஸ்ரீ (10) என்ற மகளும் உள்ளனர். சுமதியின் கணவர் அருணாசலம் 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இந்நிலையில் சுமதி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. மேலும் நாளுக்கு நாள் நோயினால் அவதிப்பட்டு வந்த சுமதி நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த மருவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.