உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

Published On 2022-03-05 14:12 IST   |   Update On 2022-03-05 14:12:00 IST
போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 20 வாகனங்கள் நாளை மறுநாள் (7-ந்தேதி) பொதுஏலம் விடப்பட உள்ளன.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் மது குற்ற வழக்குகளில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 20 வாகனங்கள் நாளை மறுநாள் (7&ந்தேதி) பொதுஏலம் விடப்பட உள்ளன.

இது குறித்து மதுவிலக்கு அமல்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கிய பிரகாசம் தெரிவித்துள்ளதாவது :

பெரம்பலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 19 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் என மொத்தம் 20 வாகனங்கள்

வருகிற 7&ந்தேதி அன்று காலை 10 மணி முதல் தண்ணீர் பந்தலில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் எஸ்.பி.மணி முன்னிலையில்  பொது ஏலத்தில் விடப்படவுள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இருசக்கர வாகனத்துக்கு  ரூ.10 ஆயிரம் வைப்புத்தொகை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஏலத்தின் போது ஆதார் அட்டையை தவறாமல் கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News