உள்ளூர் செய்திகள்
மஞ்சுவிரட்டு போட்டியில் 28 பேர் காயம்
சிவகங்கை அருகே நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் 28 பேர் காயமடைந்தனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே இருமதி கிராமத்தில் உள்ள பாலாருடைய ஜய்யனார், காளியம்மன் கோவிலில் மகாசிவராத்திரி திருவிழா நடந்தது.
இதை முன்னிட்டு மஞ்சு விரட்டு போட்டி நடை பெற்றது. இதனை ராமநாத புரம் மன்னர் குமரன் சேதுபதி, இருமதி துரை கருணாநிதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.
முதலில் மேளதாளத் துடன் சென்ற மஞ்சுவிரட்டு திடலில் மாடுகளுக்கு மரியாதை செய்தனர். தொடர்ந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. கூட்டமாக திரண்ட இளை ஞர்கள் அதனை பிடிக்க முயன்றனர். சில காளைகள் சிக்கின. பல காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் சென்றது.
சிறப்பாக விளையாடிய சிறந்த காளைகளுக்கு மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப் பட்டது. மஞ்சுவிரட்டில் 300க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண் டனர். ஆனால் மருத்துவ பரிசோதனையில் 289 காளைகளுக்கு மஞ்சு விரட்டில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப் பட்டது. 15 காளைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
மஞ்சுவிரட்டு திடலில் தற்காலிக மருத்துவமனை யில் திருவேம்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்து வர்கள் அழகுதாஸ், மணி கண்டன் தலைமையில் மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸ் வசதியுடன் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
மஞ்சுவிரட்டில் 25 நபர்கள் காயம் அடைந்தனர். 3 நபர்கள் மேல் சிகிச்சைக் காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தேவகோட்டை காவல் துறை கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட் டனர்.
இருமதி, சக்கந்தி, முட்டக் குத்தி, சிலாமேக வளநாடு, திடக்கோட்டை, மொன்னி, கார்மாங்குடி, பனங்குளம் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.