உள்ளூர் செய்திகள்
உடும்பு, முயல் வேட்டையாடியவரையும், அவரை கைது செய்த வனத்துறையினரையும் படத்தில் காணலாம்.

உடும்பை வேடையாடிய முதியவர் கைது

Published On 2022-03-03 15:45 IST   |   Update On 2022-03-03 15:45:00 IST
திருப்பத்தூர் அருகே உடும்பை வேடையாடிய முதியவர் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் உத்தரவின்பேரில் திருப்பத்தூர், மானாமதுரை சமூக நல காடுகள் அதிகாரிகளுக்கு ஒன்றிணைத்து ஒரு குழு அமைக்கப்பட்டது. 

இந்த குழுவில் வனச்சரகர் மதிவாணன் தலைமையில் வனவர்கள் திருப்பதிராஜன், சம்பத்குமர், வீரையா அப்துல் ரஹீம் சதீஷ்குமார், பிரகாஷ், உதயகுமார், சாமிக்கண்ணு, கருணாநிதி மற்றும் காவலர்கள் சின்னப்பன், வாசுகி ஞானசேகரன் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். 

அந்த குழுவினர் திருப்பத்தூர்-கருப்பூர் அருகே உள்ள பகுதியில் பருத்தி கண்மாயில்  ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த  அடைக்கப்பன் (வயது 65) கையில் உடும்புடன் சென்றார் அவரை பிடித்து விசாரித்தனர். 

அப்போது அடைக்கப்பன் உடும்பை வேட்டையாடி எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அவரை கைது செய்தனர். பின்பு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

தொடர்ந்து அந்த பகுதியில் ஆய்வு செய்தபோது கருப்பையா (65) என்பவர்   முயலை வேட்டையாடி  எடுத்து சென்றார். அவரையும் வனத்துறையினர்  பிடித்தனர். அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 

Similar News