உள்ளூர் செய்திகள்
கடலூர் அருகே வயலில் பதுக்கி வைத்திருந்த 80 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்
கடலூர் அருகே தொண்டமாநத்தம் நிலப்பகுதிகளில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கடலூர்:
கடலூர் அருகே தொண்டமாநத்தம் நிலப்பகுதிகளில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் அந்த பகுதியில் உள்ள நிலப்பகுதிக்கு ரகசியமாக சென்று சோதனை செய்தனர். அப்போது நிலப்பகுதியில் சாராயம் ஊறல் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுமார் 80 லிட்டர் சாராயம் ஊறலை கடலூர் முதுநகர் போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் ஒருவரை பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.