உள்ளூர் செய்திகள்
மானாமதுரை கோவிலில் இரவு முழுவதும் வழிபாடு செய்ய ஏற்பாடு
சிவராத்திரியை முன்னிட்டு மானாமதுரை குறிச்சி காசி சிவன் கோவிலில் பக்தர்கள் இரவு முழுவதும் வழிபாடு செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை&பரமக்குடி சாலையில் உள்ள குறிச்சி வழிவிடு பெரியநாச்சி கோவில் வளாகத்தில் காசி சிவன் கோவில் சன்னதி உள்ளது.
இன்று மாலை மாசி மாத சோமவாரம் பிரதோஷ பூஜை நடைபெறுகிறது. இதில் காசி நந்திக்கு சிறப்பு வழிபாடு பூஜை நடைபெறுகிறது.
நாளை சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை விடிய விடிய சிவபூஜை வழிபாடு நடைபெறுகிறது. 21 வகையான மூலிகைகள் அபிஷேகங்கள் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு பூஜை நேரத்தில் பக்தர்கள் அனைவரும் கங்கை நீரால் அபிஷேகம் செய்து காசியில் இருந்துகொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட காசி விஸ்வநாதரை காசியில் எப்படி கங்கை கரையில் தொட்டு வணங்கப்படுகிறதோ? அதேபோல் இங்கு தொட்டு வழிபாடு செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
காசி சிவலிங்கத்தை தொட்டு வழிபாடு செய்ய மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து கோவிலில் தங்கி வழிபடுவார்கள்.