உள்ளூர் செய்திகள்
ஆலோசனை கூட்டம்

சுற்றுலா பயணிகளுக்கு பிளாஸ்டிக்கை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு

Published On 2022-02-26 15:45 IST   |   Update On 2022-02-26 15:45:00 IST
ஊட்டி கலெக்டர் அம்ரித் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
ஊட்டி: 

நீலகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் தடை செய்யப்பட்ட மற்றும் ஒருமுறை பயன் படுத்தி, தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தவிர்ப்பதும், பொதுமக்களிடையே விழிப் புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார்.
 கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் பேசியதாவது:&

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் முக்கியத்து வத்தை கருத்தில் கொண்டு, பிளாஸ்டிக் பைகள், கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், கரண்டிகள், முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் வாழை இலை வடிவத்தாள்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் மற்றும் கொடிகள் போன்ற ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 19 வகை யான பிளாஸ்டிக் பொருட் கள் பயன்பாடு தடை விதிக் கப்பட்டுள்ளது.

நீலகிரி சுற்றுலா தலம் என்பதால் சுற்றுலா பயணி களின் வருகை அதிகரித்து வருகிறது. நமது மாவட்டத் தின் சுற்றுச்சுழலை பாது காக்க அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தவிர்க்கும் வகையில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
 
நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகள் அதிகளவில் சேராத வகையில் உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் சுற்றுச்சுழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஊரக வளர்ச்சி முகமை, பேரூராட்சிகளில் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் உள்ள உணவகங்கள், கடைகள், பேக்கரி, வணிக வளாகங்களில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்து வோர் மீது அபராதம் விதித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தின் சுற்றுச் சூழலை பாதுகாக்க, அரசால் தடைசெய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக, தவிர்க்கும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூனார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் மணிகண்டன்,  நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயல்   அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News