உள்ளூர் செய்திகள்
அபராதம்

பொது இடங்களில் புகை பிடித்தவர்களுக்கு அபராதம்

Published On 2022-02-25 15:50 IST   |   Update On 2022-02-25 15:50:00 IST
பண்ருட்டி வட்டார சுகாதாரதுறை சார்பாக பண்ருட்டி நகராட்சியில் பொது இடங்களில் புகைப்பிடித்தவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டது.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டார சுகாதாரதுறை சார்பாக பண்ருட்டி நகராட்சியில் பொது இடங்களில் புகைப்பிடித்தவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் சுகாதார ஆய்வாளர்கள் சிவப்பிரகாசம், செந்தில்வளவன், பாரதி முருகன், அரிகிருஷ்ணன், ராஜ்குமார், குணபாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு புகை பிடிப்பதினால் ஏற்படும் உடல்நல குறைபாடு பற்றியும் கேன்சர் போன்ற நோய்கள் ஏற்படுவது குறித்த துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினர்.

Similar News