உள்ளூர் செய்திகள்
கடலூர் அருகே 8-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்ற வாலிபர்
கடலூர் அருகே மாணவியை கடத்தி சென்ற வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே ரெட்டிச்சாவடி பகுதியை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவி தனது வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் மாணவி வீட்டு முன்பு ஐஸ்கிரீம் கடை இருந்து வந்தது. அந்த ஐஸ்கிரீம் கடைக்கு புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பம் பகுதியை சேர்ந்த குமார் என்பவர் அடிக்கடி வந்து சென்றார். இதன்காரணமாக குமார் மற்றும் பள்ளி மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது.
நேற்று இரவு குமார் திடீரென்று மாணவி வீட்டிற்கு நேரில் வந்து மகளை காதலிப்பதாக கூறி மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றார்.
இதனால் பதட்டம் அடைந்த மாணவியின் தந்தை மற்றும் உறவினர்கள் அவர்களை பிடிப்பதற்கு முயற்சி செய்தும் முடியவில்லை.
இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது .