உள்ளூர் செய்திகள்
கடலூர் அருகே வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளி திடீர் மரணம்
கடலூர் அருகே வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள் அப்துல் கலாம் (வயது 45) ஜெய்த்தூர். (48). இவர்கள் கடலூர் அருகே நெல்லிக்குப்பம் பகுதியில் கட்டிட வேலை செய்வதற்காக கடந்த சில மாதத்திற்கு முன்பு வந்தனர்.
சம்பவத்தன்று காராமணிக்குப்பம் பகுதியில் ஜெய்தூர் என்பவர் டீ குடிக்க சைக்கிளில் சென்றபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
இதனைத்தொடர்ந்து சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மருத்துவர்கள் சோதனை செய்து ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.