உள்ளூர் செய்திகள்
கடலூர் அருகே அரசு ஊழியர் மனைவி தற்கொலை
கடலூர் அருகே அரசு ஊழியர் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே கோண்டூர் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். அரசு சேவை இல்லத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வாணி (வயது 38).
சம்பவத்தன்று கோபாலகிருஷ்ணன் தனது வேலையை முடித்து வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் சமையலறையில் புடவையால் வாணி தூக்கு மாட்டி மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவர் கோபாலகிருஷ்ணன், மகள் காவியா ஸ்ரீ ஆகியோர் உடனடியாக வாணியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனர்.
அப்போது வாணி ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.