உள்ளூர் செய்திகள்
தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தம்பதி
திருப்புவனம் பேரூராட்சியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கணவன்-மனைவி இருவரும் வெற்றி பெற்றனர்.
மானாமதுரை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சி 9-வது வார்டில் தி.மு.க. மாவட்ட துணைச்செயலாளர் சேங்கைமாறனும், 8வது வார்டில் இவரது மனைவி வசந்தியும் போட்டியிட்டனர். இருவரும் வெற்றி பெற்றனர்.
அதேபோன்று திருப்புவனம் பேரூராட்சி 1-வது வார்டில் போட்டியிட்ட சேங்கைமாறனின் மைத்துனர் மனைவி செல்வியும் வெற்றி பெற்றார்.
மேலும் இதே பேரூராட்சியில் அ.தி.மு.க.வின் இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிட்ட த.மா.கா.வை சேர்ந்த அயோத்தி, இவரது தம்பி பாரத்ராஜ், அயோத்தியின் அண்ணன் சூரசிங்கத்தின் மனைவி வெங்கடேசுவரி என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3பேர் வெற்றி பெற்றுள்ளனர்.