உள்ளூர் செய்திகள்
கடலூர் பாடலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணி தீவிரம்

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணி தீவிரம்

Published On 2022-02-23 15:54 IST   |   Update On 2022-02-23 15:54:00 IST
கடலூர் பாடலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணி கம்மியம் பேட்டையில் தொடங்கியது.
கடலூர்:

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமாக கடலூர் மாவட்டத்தில் சுமார் 22 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை அளவீடு செய்து கல் நடும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் கடலூர் பாடலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணி கம்மியம் பேட்டையில் தொடங்கியது. இதில் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் உதவி ஆணையர் பரணிதரன், துறை செயற்பொறியாளர் கலையரசு, உதவி கோட்ட பொறியாளர் அசோகன், உதவி பொறியாளர் சிவசங்கரி, கோயில் செயல் அலுவலர் சங்கர் முன்னிலையில் கோவில் நிலம் அளவீடு செய்யும் பணி நடந்தது.

பின்னர் சுமார் 2.5 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு அதில் கல் நடும் பணி நடைபெற்றது. இதில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Similar News