உள்ளூர் செய்திகள்
கடலூர் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு
கடும் பனிப்பொழிவு காரணமாக கடலூர் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
கடலூர்:
தமிழகம் முழுவதும் அக்டோபர் 25-ந் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடலூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை கொட்டித் தீர்த்தது. தொடர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கன மழை பெய்து வந்தது.
இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக முற்றிலும் மழை ஓய்ந்து காணப்பட்டது. அதன்படி காலை நேரங்களில் சுட்டெரிக்கும் வெயிலும் இரவில் குளிர்ந்த காற்றும் வீசி வந்தது. இந்த சீதோஷ்ண மாற்றத்தால் மாவட்டம் முழுவதும் ஏராளமான மக்கள் சளி மற்றும் காய்ச்சல் பாதிக்கப்பட்டு அவதியடைந்து வந்தனர்.
இன்று காலை முதல் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. மேலும் எதிரே யார் வருகிறார் என்று கூட தெரியாத அளவிற்கு இந்த மூடுபனி கொட்டி தீர்த்தது. இதனால் வாகன ஓட்டிகள் தங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு படி சென்றனர். மேலும் அன்றாட தேவைகள் மற்றும் வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
மேலும் இந்த மூடுபனியால் அதிகாலையில் குறைந்த அளவிலான மக்கள் மட்டுமே தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மக்கள் குளிர் தாங்காமல் தீ மூட்டி அதனை சுற்றி அமர்ந்திருந்தனர். இந்த கடும் பனிப்பொழிவால் கடலூர் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.