உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

சேலத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்களை உள்ளே அனுப்புவதில் காலதாமதம்

Published On 2022-02-22 09:57 IST   |   Update On 2022-02-22 09:57:00 IST
சேலம் மாநகராட்சி 60 வார்டுகளுக்கும் ஒரே இடத்தில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டதால் முகவர்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

சேலம்:

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் ஓட்டு எண்ணிக்கை சேலம் சக்திகைலாஸ் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் தொடங்கியது. இங்கு அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்குள் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் முகவர்களை போலீசார் தீவிர சோதனைக்கு உட்படுத்தி ஒவ்வொருவராக உள்ளே செல்ல அனுமதித்தனர் .

சேலம் மாநகராட்சி 60 வார்டுகளுக்கும் ஒரே இடத்தில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டதால் முகவர்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்லும் முகவர்கள் அலைபேசி, ஏர்பட்ஸ், ப்ளூடூத் உள்ளிட்ட தொழில்நுட்ப உபகரணங்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.

இதனால், போலீசார் ஒவ்வொரு முகவரையும் தனிப்பட்ட முறையில் சோதனைக்கு உட்படுத்தி உள்ளே செல்ல அனுமதித்தால், காலை 8 மணிக்கு துவங்க வேண்டிய ஓட்டு எண்ணும் பணி காலதாமதமாக 8 . 25 மணிக்கு தொடங்கியது.

மேலும் முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்துக்குள் உடனடியாக அனுப்ப வேண்டி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Similar News