உள்ளூர் செய்திகள்
வழக்கு பதிவு

கடலூர் அருகே முன்விரோத தகராறில் இருதரப்பினர் மோதல்: 2 பேர் காயம்- 7 பேர் மீது வழக்கு

Published On 2022-02-21 16:08 IST   |   Update On 2022-02-21 16:08:00 IST
கடலூர் அருகே முன்விரோத தகராறில் இருதரப்பினர் மோதலில் 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்:

கடலூர் அருகே குள்ளஞ்சாவடி அரசக்குப்பம் சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் கடந்த 16-ந் தேதி மாசிமக திருவிழா முடித்து முத்தாலம்மன் சாமியுடன் வீதியில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ராமநாதகுப்நம் சேர்ந்த உத்திராபதி, அரிகரன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளனர். இதனை ரவிக்குமார் மற்றும் கிராம மக்கள் தட்டி கேட்டனர். இந்த முன் விரோத காரணமாக சம்பவத்தன்று ரவிக்குமார் ராமநாதகுப்பத்தில் உள்ள ஓட்டலில் சாப்பிட சென்றபோது அவரை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதனை தொடர்ந்து ராமநாதகுப்பம் சேர்ந்த அரிகரன் அரசகுப்பம் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் அரிகரனை வழிமறித்து மோட்டார் சைக்கிள் சாவியை பிடிங்கினார். இதனால் அரிகரன் தனது உறவினரான செஞ்சி வேல் மற்றும் உத்திராபதிக்கு போன் மூலம் தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த செஞ்சிவேலுவை அந்த கும்பல் தாக்கினர்.

இந்த தாக்குதலில் 2 தரப்பை சேர்ந்த ரவிக்குமார், செஞ்சிவேல் ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் உத்திராபதி, அரிகரன், கந்தவேல், கிருஷ்ணன், ரவிக்குமார், ராஜாராமன், விஜயகாந்த் ஆகிய 7 பேர் மீது தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News