குப்பைகளாக காட்சி அளிக்கும் தேவானம்பட்டினம் கடற்கரை
கடலூர்:
கடலூர் தேவனாம்பட்டினத்தில் சில்வர் கடற்கரை இருந்து வருகின்றது. இந்த தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கடற்கரை ரசிப்பதற்கு வந்து செல்கின்றனர்.
மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்பவர்கள் என ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதுமட்டுமின்றி வெளி மாவட்டம் போன்ற பகுதிகளிலிருந்து கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் வாரந்தோறும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விழா காலங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு அதிகளவில் திரண்டு ஆனந்தமாக பொழுதைக் கழித்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடற்கரையில் விளையாடி செல்வார்கள்.
இதனை தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தைவிட அதிகளவில் பொதுமக்கள் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து சென்றனர்.
இதனைத் தொடர்ந்து கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை முழுவதும் தற்போது குப்பை காடாக மாறி உள்ளது. இதன் மூலம் கடற்கரை கரையோரம் முழுவதும் குப்பைகள் அதிக அளவில் இருந்ததால் ஒருபுறம் துர்நாற்றம் வீசுவதோடு கடற்கரை அழகு முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் காலை முதல் வரக்கூடிய பொதுமக்கள் முகம் சுளித்தபடி கடற்கரைக்கு வந்து செல்வதையும் காண முடிந்தது. ஆகையால் சம்பந்தபட்ட கடலூர் மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக குப்பை காடாக காட்சி அளித்து வரும் கடற்கரையை உடனடியாக சுத்தம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.