உள்ளூர் செய்திகள்
பண்ருட்டியில் மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்
பண்ருட்டியில் மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி மேலப்பாளையம் பகுதியில் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிங்காரவேலன், ஏட்டு தேவர் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த மாட்டு வண்டியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அரசு அனுமதி இல்லாமல் திருட்டுதனமாக மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். மாட்டு வண்டியை ஓட்டி வந்த அதே பகுதியை சேர்ந்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.