உள்ளூர் செய்திகள்
வாக்களித்தவர்கள்

கடலூர் மாநகராட்சி வார்டுகளில் வாக்களிக்க ஆர்வத்துடன் குவிந்த புதிய வாக்காளர்கள்

Published On 2022-02-19 16:09 IST   |   Update On 2022-02-19 16:09:00 IST
கடலூர் அருகே செம்மண்டலம் காந்திநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் அய்யப்பன் எம்.எல்.ஏ. தனது குடும்பத்துடன் வந்து வாக்கினை பதிவு செய்தார்.
கடலூர்:

கடலூர் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு முதல் தேர்தலை இன்று சந்திக்கிறது. மாநகராட்சியில் மொத்தம் 45 வார்டுகள் உள்ளன. இந்த 45 வார்டுகளில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் உள்பட 264 பேர் களத்தில் உள்ளனர்.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மொத்தம் 152 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடலூர் மாநகராட்சியை பொறுத்தவரை மொத்தம் 1 லட்சத்து 44 ஆயிரத்து 474 பேர் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் முதல்முறை வாக்களிக்கும் இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட புதிய வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

கடலூர் அருகே செம்மண்டலம் காந்திநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் அய்யப்பன் எம்.எல்.ஏ. தனது குடும்பத்துடன் வந்து வாக்கினை பதிவு செய்தார். தொடர்ந்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

Similar News