உள்ளூர் செய்திகள்
திட்டக்குடி நகராட்சி, பெண்ணாடம் பேரூராட்சியில் ஆர்வத்துடன் வாக்களித்த வாக்காளர்கள்
பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்குச்சாவடியில் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.
திட்டக்குடி:
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் இன்று காலை தொடங்கியது. திட்டக்குடி நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகளில் 124 பேர் களத்தில் உள்ளனர்.
இதனையடுத்து வாக்காளர்கள் வாக்களிக்க 24 வாக்குச்சாவடிகள் தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. மேலும் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வரும் வாக்காளர்கள் அனைவரும் முககவசம் அணிந்து வருகின்றனர். முககவசம் அணியாதவர்களுக்கு முககவசம் வழங்கப்படுகிறது.
இதேபோல் பெண்ணாடம் பேரூராட்சியில் மொத்தம் 14 வார்டுகளில் 70 பேர் போட்டியிடுகின்றர். வாக்காளர்கள் வாக்களிக்க 8 வாக்குச்சாவடிகள் தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. அனைத்து பகுதிகளிளும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்குச்சாவடியில் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.