உள்ளூர் செய்திகள்
காசி விஸ்வநாதர் கோவில் தெப்பத்திருவிழா
சிவகங்கையில் காசிவிஸ்வநாதர் கோவில் தெப்பத்திருவிழா விமரிசையாக நடந்தது.
சிவகங்கை
சிவகங்கை நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி அம்மன் சமேத காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்கு மாசி மகா திருவிழாவை முன்னிட்டு 3ம் ஆண்டு தெப்பத்திருவிழா விமரி சையாக நடந்தது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தெப்பத்தின் கரைகளில் அமைக்கப்பட்ட மதில் சுவரில் அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். முன்னதாக உற்சவர் காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மனுடன் சர்வ அலங்காரத்தில் கோவில் திருக்குளத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வாகனத்தில் எழுந்த ருளினார்.
தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகா தீபாராதனை காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மனுக்கு காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மங்கள வாத்தியங்களுடன் சுவாமி& அம்மன் தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருக்குளத்தில் மின்னொளியில் தெப்பத்தில் அருள் பாலித்த சுவாமி அம்மனை பக்தர்கள் வழிபட்டனர்.