உள்ளூர் செய்திகள்
அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை மனு
100 நாள் வேலை திட்டத்தில் ஊதியத்தை அதிகரிக்க வேண்டும் என்று விவசாயிகள் அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டத்தில் 100நாள் வேலை திட்டத்தின் மூலம் விவசாயிகள், பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், ஆவரங்காடு விவசாயிகளும் 100 வேலை திட்டத்துக்கு சென்று வருகின்றனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் வீரபாண்டி, மாவட்ட தலைவர் ஜெயராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஆண்டி, ஆவரங்காடு தி.மு.க. கிளை செயலாளர் தவமணி ஆகியோர் தலைமையில் இப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் வட்டாரவளர்ச்சி அலுவலகத்தில் திரண்டனர். அவர்கள் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அதில், தற்போது 100நாள் வேலை திட்டத்துக்கு காலை 6 மணிக்கு வரச்சொல்கிறார்கள். மேலும் ஊதியத்தை குறைத்து வழங்குகிறார்கள். இதனால் 100 நாள் வேலைக்கு செல்வோர் பாதிக்கப்படுகிறார்கள். காலை 8 மணிக்கு வேலைக்கு வரவேண்டும் என்பதனையும், ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.