உள்ளூர் செய்திகள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெறுவதையொட்டி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக ராமநாதபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பேரூராட்சி, மானாமதுரை நகராட்சி ஆகிய அலுவலகங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, வாக்குப்பதிவு மையங்களுக்கு பயன்படுத்த உள்ள எழுதுபொருட்கள் மற்றும் படிவங்கள் இவற்றுடன் கொரோனா நோய்த்தொற்று தடுப்பிற்கான மருத்துவ உபகரணங்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் அலு வலகத்தில் இருந்து வாக்குப்பதிவு மையங்களுக்கு எடுத்துச் செல்லும் பணி நடந்தது.
இதை மாவட்ட தேர்தல் அலுவலர்-கலெக்டர் மதுசூதன்ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:
மாநில தேர்தல் ஆணைய அறி வுரைப்படி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை(19ந்தேதி) நடைபெறுகிறது. அனைத்து வாக்குப்பதிவு மையங்களுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகின்றன. அவற்றுடன் படிவங்கள், எழுதுபொருட்கள், மை மற்றும் கொரோனா நோய்த்தொற்று தடுப்பிற்கான மருத்துவ உபகரணங்கள் என 80 வகைப்பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதற்கான பணிகள் இன்று அனைத்து தேர்தல் அலுவலகங்களிலும் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
சிவகங்கை மாவட்டத்தில் 4 நகராட்சிகளுக்கும், 11 பேரூராட்சிகளுக்கும் என 15 இடங்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதில் 285 இடங்களில் 9 இடங்களுக்கு போட்டியின்றித் தேர்வு செய்யப் பட்டதால், 1 இடத்தில் வேட்புமனு வரவில்லை. 275 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகின்றன. இவற்றிற்கு 45 மண்டலமாக பிரிக்கப்பட்டு, மண்டல அலுவலர்கள் நியமித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வாக்குப்பதிவு நடைபெறுவதற்கான அனைத்துப்பணிகளும் தயார் நிலையில் உள்ளன. மாவட்ட தேர்தல் அலுவலர் என்ற முறையில் நானும், மாவட்ட தேர்தல் பார்வையாளர் தங்கவேலு ஆய்வுப்பணி மேற்கொண்டு, தற்பொழுது அனைத்துப் பணிகளும் முடிவுற்று தயார் நிலையில் உள்ளது.
அதேபோல் வாக்குப் பதிவு மையத்தில் பணி யாற்ற உள்ள தேர்தல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பணி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 3&ம்கட்ட தேர்தல் பணிக் கான பயிற்சி வழங்கப்பட்டு வாக்குப்பதிவு மையங்களுக்கு செல்கிறார்கள்.
தேர்தல் பணியை பொறுத்த வரை முழுமையாக முடிக்கப்பட்டு, அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் சி.சி.டி.வி. காமிரா மூலம் பதிவு செய்வதுடன், பதற்றமான வாக்குச் சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு நேரடியாக கண்காணிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, திருப்புவனம் பேரூராட்சி தேர்தலுக்கான வட்டார அலுவலர் ஜீனு, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ராஜா, மானாமதுரை நக ராட்சி ஆணையாளர் கண்ணன், திருப்புவனம் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.