உள்ளூர் செய்திகள்
மின் ரெயில்பாதையில் ஆய்வு

திருச்சி-காரைக்குடி மின் ரெயில்பாதையில் அதிகாரி ஆய்வு

Published On 2022-02-17 16:54 IST   |   Update On 2022-02-17 16:54:00 IST
திருச்சி-காரைக்குடி மின் ரெயில்பாதையில் அதிகாரி ஆய்வு செய்தார்.
காரைக்குடி

திருச்சி-காரைக்குடி புதிய மின் மயமாக்கப்பட்ட ரெயில் பாதையை தென் சரக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார்ராய் இன்று ஆய்வு செய்தார். பாதுகாப்பு ஆணையரது ஆய்வு ரெயில் திருச்சியில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டது. 

அப்போது  திருச்சி, குமாரமங்கலம், புதூர், அய்யம்பட்டி ரெயில்வே கேட் மற்றும் குமாரமங்கலம் ரெயில் நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். 

பாதுகாப்பு ஆணையருடன் முதன்மை மின்சார பொறியாளர் ராஜமுருகன், மின்மயமாக்கல் திட்ட இயக்குனர் சமீர் டிஹே, மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News