உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

ரசாயன பவுடரை சாப்பிட்ட குழந்தை உயிரிழப்பு

Published On 2022-02-16 14:41 IST   |   Update On 2022-02-16 14:41:00 IST
ரசாயன பவுடரை உட்கொண்ட குழந்தை இறந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம்  அறந்தாங்கி அருகே மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பழனியப்பன் மனைவி விஜயா இவர்களுக்கு மகள் கவிநயா(12), மகன் கபிலன் (7), மகள் ரித்தியா (2) ஆகியோர் உள்ளனர். 

பழனியப்பன் கொப்பரைத் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கொப்பரை தேங்காய் வெள்ளை நிறத்தில் இருந்தால் அதற்கு சந்தையில் அதிக விலை கிடைக்கிறது என்பதற்காக அமோனியம் சல்பேட் என்ற ராசயனத்தை பயன்படுத்தி சிலர் கொப்பரை தேங்காய் வியாபாரம் செய்து வருகின்றனர். 

அதே போன்று பழனியப்பன் அம்மோனியம் சல்பேட்டை பயன்படுத்தி வந்துள்ளார். வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, அருகில் இருந்த  ரசாயன பவுடரை பார்த்துள்ளது. அதனை திண்பண்டம் என நினைத்து அக் குழந்தை அதனை எடுத்து சாப்பிட்டு மயக்கமாகியுள்ளது. இதை பார்த்து பதறிய பெற்றோர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு தொடர்ந்து தீவிர சிகிச்சையிலிருந்த குழந்தை ரித்தியா, நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல்த் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

கொப்பரை தேங்காய்க்கு பயன் படுத்தும் ரசாயனத் தை உட்கொண்டு 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News