உள்ளூர் செய்திகள்
புனித அருளானந்தர் ஆலய தேர் பவனி
காளையார்கோவிலில் புனித அருளானந்தர் ஆலய தேர் பவனி நடந்தது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் பிரசித்தி பெற்ற புனித அருளானந்தர் தேவாலயம் உள்ளது. இங்கு கடந்த 4-ந் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நாள்தோறும் நவ நாள் திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
விழாவின் இறுதி நாள் திருவிழாவான சிறப்பு திருப்பலி பூஜை நடந்தது. இதில் அருட்தந்தை தாமஸ் தலைமை தாங்கி திருப்பலியை நடத்தினார். அதனைத் தொடர்ந்து புனித அருளானந்தரின் உருவம் தாக்கிய தேர்ப்பவனி நடை பெற்றது.
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. தேர்ப்பவனியை யொட்டி 150-க்கும் மேற் பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மறுநாள் காலை காளையார் கோவில் பங்குத் தந்தை சூசை ஆரோக்கியம் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியுடன் விழா நிறைவடைந்தது.