உள்ளூர் செய்திகள்
மழை

கடலூர் பகுதியில் திடீர் மழை

Published On 2022-02-14 16:06 IST   |   Update On 2022-02-14 16:06:00 IST
கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்தது

கடலூர்:

மாலத்தீவு பகுதியிலிருந்து வடகர்நாடகா வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக கடலோரப் பகுதி, குமரிக்கடல் மாலத்தீவு ஆகிய பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்.

மேலும் தென் தமிழக மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்தது.

இந்த நிலையில் இன்று காலை கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர், பாதிரிகுப்பம், செம்மண்டலம்,, சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

பின்னர் லேசான சாரல் மழையுடன் தொடங்கி மழையாக மாறியது. இம்மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்து வந்தது. இதன் காரணமாக சாலையில் சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வந்தனர். மேலும் பலர் குடை பிடித்தபடியும், வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றதையும் காணமுடிந்தது.

Similar News