உள்ளூர் செய்திகள்
போதை பொருட்கள் கடத்தல் வழக்குகள் குறித்து திடீராய்வு
ஆலங்குடியில் போதை பொருட்கள் கடத்தல் வழக்குகள் குறித்து திடீர் ஆய்வு செய்யப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சரக காவல் நிலையத்திற்குட்பட்ட போதைப்பொருட்கள் சம்பந்தமான கோப்புகளை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு ரெஜினாபேகம் தலைமையில் ஆலங்குடி காவல் அலுவலக கூட்டரங்கில் ஆய்வு செய்யப்பட்டது.
ஆலங்குடி சரக காவல் நிலையத்துக்கு உட்பட்ட வடகாடு கீரமங்கலம்,செம் பட்டிவிடுதி மற்றும் கறம்பக் குடி மழையூர், ரெகுநாதபுரம் ஆகியபகுதிகளில் கஞ்சா, குட்கா, புகையிலை மற்றும் போதை பொருட்கள் சம்பந்தப்பட்ட அனைத்து காவல் நிலையங்களில் உள்ள காவல் வழக்கு பதிவு மற்றும் கோப்புகளை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் காவல் ஆய்வாளர்கள் ஆலங்குடி அழகம்மை, வடகாடு பழனிச்சாமி, கீரமங்கலம் பாஸ்கர், கறம்பக்குடி ராஜேஷ்கண்ணன் மற்றும் ஆலங்குடி உதவி ஆய்வாளர் குணசேகரன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.