உள்ளூர் செய்திகள்
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்
திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மின்னணு எந்திரங்கள் பயன்படுத்துவது குறித்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில்உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மின்னணு எந்திரங்கள் பயன்படுத்துவது குறித்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
மின்னணு எந்திரங்களை வேட்பாளர்கள் முன்னி லையில் அனைத்து வாக்குச் சாவடி மையங்களுக்கும் ஒதுக்குவது சம்பந்தமாகவும் ஆலோசிக்கப்பட்டது. செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இது குறித்த விளக்கத்தை வேட்பாளர்கள் முன்னிலையில் செயல் அலுவலர் செய்முறையோடு தெளிவுபடுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார தேர்தல் அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வேட்பாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.