உள்ளூர் செய்திகள்
கடத்தல்

பண்ருட்டி அருகே இளம்பெண்ணை கடத்திய டீக்கடைக்காரர்

Published On 2022-02-12 17:02 IST   |   Update On 2022-02-12 17:02:00 IST
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இளம்பெண் கடத்தியதாக டீக்கடைக்காரர் மீது அப்பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
பண்ருட்டி:

பண்ருட்டி அருகே கீழ்காவனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவரது 17 வயது மகள் விழுப்புரம் பஸ் நிலையத்தில் தேனீர் விடுதி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 10-ந் தேதி இரவு வீட்டில் இருந்த போது திடீர் என மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிவகுமார் தனது மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் அவரது மகள் கிடைக்கவில்லை.

எனவே சிவகுமார் புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகார் மனுவில் தனது மகளை டீக்கடை நடத்தி வரும் மாம்பழப்பட்டு பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் கடத்தி சென்று உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

Similar News