உள்ளூர் செய்திகள்
சிறுமி திருமணம் நிறுத்தம்

திட்டக்குடி அருகே சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

Published On 2022-02-12 16:51 IST   |   Update On 2022-02-12 16:51:00 IST
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே 15 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
திட்டக்குடி:

திட்டக்குடியை அடுத்துள்ள போத்திரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சக்தி முருகன் (வயது 29). இவருக்கும், இவரது உறவினர் சேலம் மாவட்டம் வீரகனூர் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் நேற்று போத்திரமங்கலம் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இது பற்றிய தகவல் மாவட்ட சமூக நலஅலுவலருக்கு கிடைத்தது. இச்சம்பவம் குறித்து அவினங்குடி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற ஆவினங்குடி போலீசார் சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

Similar News