உள்ளூர் செய்திகள்
காட்டுமன்னார்கோவில் பகுதியில் பரவலாக சாரல் மழை
மழை காரணமாக மோகூர், ரெட்டியூர், ஈச்சம்பூண்டி, கண்டமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள 100 ஏக்கர் நெல் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.
காட்டுமன்னார்கோவில்:
தமிழகம் முழுவதும் கடலோர பகுதியில் வெப்ப சலனம் காரணமாக பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் பகுதியில் நேற்று முதல் சாரல் மழை பெய்து வருகிறது.
குறிப்பாக லால்பேட்டை, குமராட்சி, ஆயங்குடி, முட்டம், தில்லைநாயகபுரம், உடையூர், கருநாகநல்லூர், திட்டமல்லி, திருச்சின்னபுரம், மானியஆடூர், அரசூர், ரெட்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இன்று காலையும் பன்னீர் தெளிப்பது போல மழை தூறியது.
இந்த மழை காரணமாக மோகூர், ரெட்டியூர், ஈச்சம்பூண்டி, கண்டமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள 100 ஏக்கர் நெல் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.