உள்ளூர் செய்திகள்
பண்ருட்டியில் ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த பணம் பறிமுதல்
பண்ருட்டியில் ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.90 ஆயிரம் பணத்தை நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் பறிமுதல் செய்தனர்.
பண்ருட்டி:
தமிழகம் முழுவது நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பணம் மற்றும் வெகுமதிகள் வழங்குவதை தடுக்க தேர்தல் நடத்தை விதிகள் அமுல்படுத்தப்பட்டு பறக்கும் படைகள் மூலம் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன்படி பண்ருட்டி நகராட்சி திருவதிகை ஹவுசிங்போர்டு அருகில் பறக்கும் படை தாசில்தார் செந்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது கடலூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த திருக்கோவிலூரை சேர்ந்த முகமது ரபீக் என்பவர் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.90ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இந்த பணத்தை பண்ருட்டி நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் மகேஷ்வரியிடம் ஒப்படைத்தனர்.