உள்ளூர் செய்திகள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழுநோய் குறித்த கருத்தரங்கம்
மாணவர்களுக்கு தொழுநோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடை பெற்றது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மழையூர் அரசு மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் தொழு நோய் ஸ்பர்ஸ் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் அரங்கசாமி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் பால்ராஜ் முன்னிலை வகித்தார். தொழுநோய் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறை குறித்து புதுக்கோட்டை மாவட்ட துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் வெங்கட்ராமன் சிறப்புரை ஆற்றினார்.
கருத்தரங்கில் தொழுநோய் குறித்த சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்கப்பட்டது. நிகழ்வில் மருத்துவமல்லா மேற்பார்வையாளர் ஹரி கரன்,வட்டார சுகாதார மேற்பார்வையாளர்பழனி, மருத்துவமல்லா மேற் பார்வையாளர் பொறுப்பு ரமா ராமநாதன், சுகாதார ஆய்வாளர்கள் சிதம்பர ராஜா, விக்னேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் 1300 மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.