உள்ளூர் செய்திகள்
நூலகத்தை டி.எஸ்.பி. லாமெக் தொடங்கி வைத்து மாணவர்களிடம் பேசினார்.

காவல்துறை சார்பில் நூலகம் திறப்பு விழா

Published On 2022-02-10 15:36 IST   |   Update On 2022-02-10 15:36:00 IST
சீர்காழி ஊழியக்காரன் தோப்பில் உள்ள நகராட்சி பள்ளியில் காவல்துறை சார்பில் நூலகத்தை டி.எஸ்.பி. லாமெக் தொடங்கி வைத்தார்.
சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊழியக்காரன் தோப்பில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில், மயிலாடுதுறை எஸ்.பி சுகுணாசிங் மேற்பார்வையில், சீர்காழி காவல்துறை சார்பில் புதிய நூலகம் அமைத்து அதன் திறப்பு விழா நடைபெற்றது.

தலைமை ஆசிரியர் சகிலா ரத்தினகுமாரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாபு நேசன், சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் சப்&இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். சீர்காழி டி.எஸ்.பி லாமேக் கலந்துகொண்டு நூலகத்தை திறந்து வைத்து மாணவர்களிடையே கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள், ஆசிரியைகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Similar News